நகைச்சுவை நடிகர் வடிவேலு விரைவில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர் கூட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக 2017-ம் ஆண்டு மெர்சல் படத்தில் நடித்திருந்த அவர், தற்போது கமல்ஹாசனுடன் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரச்சனை

இதனிடையே, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் ஷங்கர் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் அந்தப் படத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு தெரிவித்தார். அதனால் அவர் மீது நடிகர் சங்கத்தில் ஷங்கர் தரப்பு புகாரளித்தது. அதையடுத்து அவரை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று நடிகர் சங்கம் தடைவிதித்ததாகவும் செய்திகள் வெளியாகின.

வெப் சீரிஸ்

இந்நிலையில், ஓடிடி தளங்களில் வெப் சீரிஸில் வடிவேலுவை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதற்காக முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பதாகவும், வடிவேலுக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க அந்நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அறிவிப்பு!

வடிவேலுவுடன் பல படங்களில் பணியாற்றிய இயக்குநர் ஒருவர் இந்த நகைச்சுவைத் தொடரை இயக்க உள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு முடிவுற்ற பின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here