சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க மிகவும் ஆசையாக உள்ளதாக நடிகை பிரணிதா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இளம் நடிகை

தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இளம் நடிகை பிரணிதா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகையாக ஆர்வம்

பிரணிதா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், எனது அப்பா, அம்மா இருவரும் டாக்டர்கள். என்னையும் டாக்டராக்க விரும்பினர். ஆனால் எனக்கு நடிகையாக ஆர்வம். சினிமா வாய்ப்பு வந்ததும் எதிர்த்தனர். பின்னர் தொடர்ந்து படங்கள் வந்ததால் எனது போக்கில் விட்டுவிட்டனர். 

சரித்திர படத்தில் நடிக்க ஆசை

டாக்டராகாமல் நடிகையானதற்காக பெருமைப்படுகிறேன். பலவிதமான கதாபாத்திரங்களில் வாழ்கிற வாய்ப்பு நடிகைகளுக்குத்தான் கிடைக்கும். ஒரு சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் நடிக்க ஆசை இருக்கிறது. சரித்திர காலத்து ஆடை அணிகலன்கள் அணிந்து நடிக்க விருப்பம் உள்ளது. இவ்வாறு பிரணிதா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here