தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜின் உடம்பை கதாநாயகன் ஒருவர் குறைக்க சொல்லி உள்ளார்.

பிரபலமாகும் நடிகை

ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் கைவசம் ஜகஜ்ஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. தமிழை போல் தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

கவர்ச்சிப் படங்கள்

அடிக்கடி சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சிப் படங்களை நிவேதா பெத்துராஜ் பதிவிட்டு வருகிறார். ஒருமுறை பதிவிட்ட படங்களை விட, அடுத்தமுறை பதிவிடும் படங்கள் படுகவர்ச்சியாக இருக்கும். எனவே அவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

கதாநாயகன் அட்வைஸ்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் நடிக்கும் நிவேதா பெத்துராஜ், அங்குள்ள கதாநாயகன் ஒருவர் சொன்னபடி உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.