‘மாஸ்டர்’ படத்தில் விஜய்யுடன் பாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நடிகை ஆண்ட்ரியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

திறமைசாலி

திரையுலகில் நடிகை, பாடகி, பாடலாசிரியர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா. தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த அவர், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விஜய் கிண்டல்

அந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஆண்ட்ரியா கூறுகையில்; முழுக்க முழுக்க ரசிகர்களோட எதிர்பார்ப்புக்குத்தான் விஜய் சாரோட நடித்தேன். மாஸ்டர் படத்தில் இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. வெறித்தனம்’ பாட்டு அவர்தான் பாடினார்னு தெரியாம இருந்தேன். அது தெரிஞ்சு, `ஏன்மா நீ தமிழ்நாட்டுலதான் இருக்கியா’னு என்னைக் கிண்டல் செய்தார்.

ஏமாற்றம்

விஜய் சாரும் நானும் சேர்ந்து பாடின `கூகுள் கூகுள்’ பாடல் செம ஹிட் ஆனது. அதேபோல் `மாஸ்டர்’லயும் வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்த்தேன். ஆனா, பெண் பாடகியே படத்துல இல்லைனு சொல்லிட்டாங்க’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here