வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர் தமிழ், தெலுங்கில் தயாரான காமிரேட் படத்தில் நடித்திருந்தார். தற்போது சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

பாதுகாப்பற்ற நிலை

கொரோனா காலத்தில் தான் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக ராஷ்மிகா கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது; நாம் பல விஷயங்களில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறோம். நம்மை பற்றி, நண்பர்களை பற்றி, அல்லது  மற்றவர்கள் பற்றியோ கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நான் அதிக எடை கூடி விட்டேனா, அல்லது மிகவும் ஒல்லி ஆகிவிட்டேனா என்று மற்றவர்களிடம் கேட்டு  நம்மை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.

ராஷ்மிகா கவலை

“உன் முகத்துக்கு என்னாச்சு?” என்று யாராவது கேட்டால் அன்று முதல் முக்காடு போடத் தொடங்கி விடுகிறோம். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள் குறித்து கவலைப்படுகிறோம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், கொரோனா ஊரடங்கு காலத்தில் நான் பாதுகாப்பற்ற தன்மையை அதிகம் உணர்கிறேன்.

எதுவும் நம் கையில் இல்லை

என் வேலை, என் இதயம், என் தோற்றம், என் மன ஆரோக்கியம், இப்படி அனைத்தையும் பற்றித்தான். ஆனால் இது எதுவும் நம் கையில் இல்லை என்பதை உணர்தேன். அதனால் நம்மால் கட்டுப்படுத்தக் கூடிய விஷயங்களை பற்றி மட்டும் கவலைப்படுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here