கொரோனா லாக்டவுன் காலத்திலும் தன்னுடைய இளவரசருக்காக காத்திருக்கிறேன் என நடிகை ஷெரின் கூறியுள்ளார்.

ஷெரின்

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகான நடிகை ஷெரின், பின்னர் ஜெயா, ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

பிக் பாஸ் புகழ்

பின்னர் சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் பங்கேற்றார். சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், அவரை பிரபலப்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக் பாஸில் பங்கேற்ற ஷெரினுக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

திருமணம்

சமீபத்தில் பேட்டி கொடுத்த ஷெரினிடம் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திருமணம் செய்துகொள்வதற்கு ஏற்ற நபர் நம் வாழ்வில் யாராவது இருக்க வேண்டும். ஆனால், அப்படியான நபர் தற்போது என்னுடைய வாழ்வில் இல்லை.

இளவரசருக்காக காத்திருக்கிறேன்

மேலும், இது கொரோனா லாக்டவுன் என்பதால் நான் வீட்டிற்குள்ளேயே என்னுடைய இளவரசருக்காக காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார். ஷெரினின் இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் பலரும், உங்களுக்கு ஏற்ற ராஜகுமாரன் கிடைக்க வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here