படிப்பில் கவனம் செலுத்துவதால் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருந்து நடிகை பிரியா வாரியர் வெளயேறிவிட்டார்.

அடுத்தடுத்து படங்கள்

‘ஒரு அடார் லவ்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை பிரியா வாரியர், தனது முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார். இதன் காரணமாக அடுத்து ஸ்ரீதேவி பங்களா என்ற பாலிவுட் படத்தில் நடித்தார். அதன்பிறகு கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார்.

இன்ஸ்டாகிராமில் பிசி

பின்னர் படவாய்ப்புகள் இல்லாததால் இன்ஸ்டாகிராமில் பிசியானார். 72 லட்சம் பேர் அவரை பின் தொடர்ந்தனர். இந்த நிலையில் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கக்தில் இருந்து அவர் வெளியேறிவிட்டார்.

படிப்பில் கவனம்

சினிமா வாய்ப்புகள் இல்லாததால் படிப்பில் கவனம் செலுத்துகிறார் பிரியா வாரியர். படிப்புக்கு சமூக வலைதளம் தடையாக இருப்பதால் இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறிவிட்டதாக அவர் கூறியுள்ளார். இருப்பினும் அவரது ரசிகர்கள் பிரியா வாரியர் பெயரில் கணக்கு வைத்து அதனை தொடர்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here