திருமணமான பின்பு முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை நடிகை சங்கவி வெளியிட்டுள்ளார்.

ரசிகர் கூட்டம்

1990களில் இளைஞர்கள் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சங்கவி. தனது திறமையான நடிப்பாலும், கவர்ச்சியாலும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தார் அவர். இன்றும் நடிகை சங்கவிக்கு ரசிகர்கள் உண்டு.

முன்னணி நடிகை

அஜித்தின் அமராவதி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சங்கவி, விஜய், அஜித், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

பெண் குழந்தை

கடந்த 2016ஆம் ஆண்டு மென்பொறியாளர் வெங்கடேஷ் என்பவரை நடிகை சங்கவி திருமணம் செய்துகொண்டார். 42 வயதாகும் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படத்தை அவர் வெளியிடாமலேயே இருந்தார்.

குழந்தையின் புகைப்படம்

இந்த நிலையில், அன்னையர் தினத்தையொட்டி தனது குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக சங்கவி வெளியிட்டுள்ளார். குழந்தை சங்கவி போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here