முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நாள் ஆகும். இது இலங்கை தமிழராலும் உலகத் தமிழராலும் ஆண்டு தோறும் மே 18 ஆம் நாள் நினைவு கூறப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் இந்நாளிலேயே இலங்கையின் வட-கிழக்குக் பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது.

நிகழ்வுகள்

1565 – ஓட்டோமான் படைகள் மால்ட்டாவை அடைந்தன. மால்ட்டாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாகியது.

1652 – வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.

1765 – கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது.

1803 – ஐக்கிய இராச்சியம் பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.

1804 – முதலாம் நெப்போலியனை பிரெஞ்சு மன்னனாக செனட் தேர்வு செய்தது.

1869 – ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது.

1896 – கோடின்கா துயரம்: ரஷ்ய மன்னன் இரண்டாம் நிக்கலாசின் முடிசூடும் நிகழ்வுக் கொண்டாட்டத்தின் போது “கோடின்கா” என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.

1897 – ஐரிய எழுத்தாளர் பிராம் ஸ்டோக்கர் எழுதிய டிராக்குலா புதினம் வெளியிடப்பட்டது.

2009 – ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் என தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள்.

2010 – நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here