சமூக வலைத்தளம் மூலம் சிலர் ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுப்பதாக பிரபல நடிகை அனுமோள் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.

முன்னணி நடிகை

தமிழில் கண்ணுக்குள்ளே, ராமர், திலகர், ஒரு நாள் இரவில் ஆகிய படங்களில் நடித்தவர் அனுமோள். கேரளாவை சேர்ந்த இவர் மலையாளத்தில் சாயில்யம், அகம், வெடி வழிபாடு, ராக் ஸ்டார், பிரமோஸ்தரம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் அனுமோள், 4 மலையாள படங்களிலும், ஒரு பெங்காலி படத்திலும் நடிக்கிறார்.

ஆபாச வீடியோ

அனுமோளுக்கு சமூக வலைத்தளம் மூலம் சிலர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ள அவர், சிலர் தங்களின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளம் மூலம் எனக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் என்னை பின் தொடராமல் இருக்க சமூக வலைத்தளத்தில் தடை செய்து நான் சோர்வடைந்து விட்டேன்.

போலீசில் புகார்?

ஒருவர் வெவ்வேறு கணக்குகளில் இருந்து எனக்கு தொடர்ந்து தனது ஆபாச வீடியோக்களை அனுப்பி வருகிறார். இப்படி அந்தரங்க புகைப்படங்களையும், ஆபாச வீடியோக்களையும் அனுப்பி தொல்லை கொடுப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள். இனியும் தொடர்ந்து செய்தால் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து சட்ட நடவடிக்கை எடுப்பேன் என அனுமோள் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here