டெல்லியில் செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள்

முகலாயப் பேரரசர் ஷாஜகான் 1638-ம் ஆண்டு இந்த மிகப்பெரிய கோட்டையைக் கட்டத் தொடங்கினார், மேலும் 1648-ம் ஆண்டு மே மாதம் 12-ந் தேதி இந்தக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

இந்த செங்கோட்டை உண்மையில், “குயிலா-ஐ-முபாரக்” (ஆசிர்வதிக்கப்பட்ட கோட்டை) என குறிப்பிடப்பட்டது. இந்த கோட்டையானது, இடைக்கால வரலாற்று நகரமான ஷாஜகானாபாத்தின் முக்கிய மையமாக இருந்தது. பேரரசர் ஷாஜகானின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த செங்கோட்டையின் செயல்திட்டம் மற்றும் அழகியல், முகலாயர்களின் படைப்புத் திறனை வெளிப்படுத்துகின்றது. இந்த கோட்டை கட்டப்பட்ட பிறகு, பல மேம்பாடுகள் பேரரசர் ஷாஜகானால் செய்யப்பட்டது. கோட்டையின் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் ஔரங்கசீப் காலத்திலும் அதற்குப்பிறகு வந்த முகலாயர்களின் ஆட்சிகாலத்திலும் நடந்தது.

சுதந்திரத்திற்கு பின்னர், இந்த இடத்தின் கட்டமைப்பில் சேர்த்தல்/திருத்தம் வரையறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இந்தக்கோட்டை முக்கியமான ராணுவ முகாமாகப்   பயன்படுத்தப்பட்டது. மேலும் சுதந்திரம் அடைந்த பின்னரும் 2003-ம் ஆண்டு வரையில் இந்த கோட்டையின் முக்கியமான பகுதி இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. செங்கோட்டையின் கட்டிடப் பணி 1638-ம் ஆண்டில் தொடங்கி 1648-ம் ஆண்டில் நிறைவடைந்தது.

15 ஆகஸ்ட் 1947 அன்று, இந்தியா சுதந்திர தேசமானது. இது இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் 15 ஆகஸ்ட் 1947 அன்று இந்தியாவின் சுதந்திரக்கொடியை ஏற்றியதன் மூலம் குறிப்பிடப்பட்டது. சுதந்திர நாளில் பிரதமரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு உரை நிகழ்த்தும் வழக்கம் இன்றுவரை தொடர்கிறது.
செங்கோட்டையில் உள்ள காட்சிப்பொருட்கள், மிகவும் உயர்தரமான கலை ஒவியங்களையும் மற்றும் அலங்கார வேலைப்பாடுகளையும் கொண்டுள்ளது. செங்கோட்டையில் உள்ள கலை வேலைப்பாடு பாரசீகர்கள், ஐரோப்பியர்கள் மற்றும் இந்தியர்களின் கலைத் தொகுப்பாகும். இது மிகவும் உயர்தர வடிவத்தையும், வெளிப்பாடு மற்றும் நிறங்களையும் கொண்டதாகும்.

நிகழ்வுகள்

1619 – டச்சு அரசியல்வாதி ஜொகான் வன் ஓல்டென்பார்னவெல்ட் ஹேக் நகரில் நாட்டுத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்டார்.

1765 – யாழ்ப்பாணத்தின் டச்சுத் தளபதியாக அந்தனி மூயார்ட் நியமிக்கப்பட்டான்.

1830 – எக்குவாடோர் விடுதலை அடைந்தது.

1846 – ஐக்கிய அமெரிக்கா மெக்சிக்கோ மீது போரை அறிவித்தது.

1880 – நியூ ஜேர்சியில் மென்லோ பூங்காவில் எடிசன் மின்சாரத்தில் இயங்கும் தனது முதலாவது தொடருந்தை சோதித்தார்.

1888 – பிரேசில் அடிமைமுறையை இல்லாதொழித்தது.

1913 – நான்கு இயந்திரங்களினால் ஆன முதலாவது விமானத்தை ஈகர் சிபோர்ஸ்கி என்ற ரஷ்யர் இயக்கினார்.

1940 – இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்தினுள் நாசி ஜெர்மனியர் புகுந்ததை அடுத்து அதன் அரசி வில்ஹெல்மேனியா பிரித்தானியாவுக்கும் இளவரசி ஜூலியானா தனது குழந்தைகளுடன் கனடாவுக்கும் தப்பி ஓடினர்.

1952 – இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here