‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் துப்பாக்கி 2ம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது. தமன் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என கூறப்பட்டது.

தமன் உறுதி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய்யை தமன் சந்தித்தபோது விரைவில் இணைந்து பணியாற்றலாம் என விஜய் கூறியிருந்தார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது தமன் ஒரு தெலுங்கு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை உறுதி செய்துள்ளார்.

விஜய் படத்திற்கு இசை

இதுதொடர்பாக பேசிய தமன், விஜய் படத்திற்கு இசையமைக்கிறேன். அதற்காக மிக உற்சாகமாக இருக்கிறேன். கடந்த மூன்று வருடமாக இதற்காக பாலோ அப் இருந்தது. தற்போது தான் சரியான நேரம் வந்துள்ளது. மகிழ்ச்சியாக இருக்கிறது” என அவர் பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here