கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் புதிய வெப் தொடரில் நடிகர் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்து வாணி போஜன் நடிக்க உள்ளார்.

கோலிவுட்டில் வாணி போஜன்

சின்னத்திரையில் அசத்திக் கொண்டிருந்த நடிகை வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் அவருக்கு ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கும் வெப் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது அவரை தேடி மேலும் ஒரு வெப் தொடர் வந்திருக்கிறது.

வெப் தொடர்

கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் வெப் தொடர் ஒன்றில் நடிகர் ஜெய்யுடன் சேர்ந்து நடிப்பதை வாணி போஜன் உறுதி செய்துள்ளார். இந்த வெப் தொடர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. ஜெய், வாணி போஜன் நடிக்கவிருக்கும் வெப் தொடரை கார்த்திக் சுப்புராஜின் உதவியாளரான சாருகேஷ் இயக்குகிறார். இந்த வெப் தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படுகிறது.

ரசிகர்கள் மகிழ்ச்சி

வாணி போஜன் அடுத்தடுத்து வெப் தொடர்களில் நடிப்பது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் ‘கள்ளச்சிரிப்பு’ என்கிற வெப் தொடரை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here