டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரில் ஏராளமான போலி கணக்குகள் இருப்பதை அறிந்த நடிகை நிவேதா பெத்துராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளம்

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூகவலைத்தளங்கள் மூலம் கட்சிகளை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. நடிகர், நடிகைகளும் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குகள் வைத்து, தங்கள் படங்கள் குறித்த விவரங்களையும், சமூக, அரசியல் கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் அவர்களை சமூக வலைத்தளத்தில் பின் தொடர்ந்து வரும் நிலையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகர்–நடிகைகள் வலைத்தளத்திலேயே பதில் அளித்து கலந்துரையாடுவதும் உண்டு. இந்த கணக்குகளில் வி‌ஷமிகள் ஊடுருவி முடக்குவதும் அடிக்கடி நடக்கின்றன.

போலி கணக்கு, வேதனை

அந்த வகையில், நடிகை நிவேதா பெத்துராஜின் பெயரில் பல போலி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் டுவிட்டரில் @nivetha_tweets என்ற கணக்கை மட்டுமே நிர்வகித்து வருகிறேன். எனது பெயரில் பல போலியான டுவிட்டர் கணக்குகள் இருப்பதால் இந்த வீடியோவை வெளியிடுகிறேன்.

ரசிகர்களுக்கு வேண்டுகோள்

டுவிட்டர் நிறுவனம் போலியான கணக்குகளை நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கொரோனா அச்சுறுத்தலால் அதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம் மேலும், எனது கணக்கை அதிகாரபூர்வமாக்குவதற்கும் சிறிது காலம் எடுக்கும். ஆகையால் இந்தக் கணக்கை மட்டும் பின்தொடருங்கள் என ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரபலமாகும் நடிகை

ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் கைவசம்  ஜகஜ்ஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் போன்ற படங்கள் உள்ளன. தமிழை போல் தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here