பிரபல சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட் தனது காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற செய்தியை அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருமணம்

தமிழ், மலையாள தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் படங்களில் நடித்து வருபவர் மேக்னா வின்சென்ட். தமிழில் தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். டான் டோனி என்பவரை காதலித்து வந்த மேக்னா, அவரை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புனித பிரான்சிஸ் தேவாலயத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

விவாகரத்து

திருமணமான ஓராண்டில் மேக்னா, டான் டோனி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் முறைப்படி நீதிமன்றம் சென்று விவாகரத்து பெற்றுள்ளனர். டான் டோனி இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. மேக்னா – டான் டோனி விவாகரத்து செய்தி வெளியானதை பார்த்து மேக்னாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here