விஜய் டிவியில் 3 சீசன்களை வெற்றிகரமாக கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சி 4வது சீசனுக்கு தயாராகி வருகிறது. இதில் பங்கேற்போரின் பட்டியல் ஒன்று வெளியாகி வலம் வந்து கொண்டிருக்கிறது.

பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி, இதுவரை 3 சீசன்களை கடந்து 4வது சீசனுக்கு தயாராகி வருகிறது. அதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்படுகிறது.

பட்டியல் லீக்

4வது சீசனில் யார், யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பார்வையாளர்கள் ஆவலாக உள்ள நிலையில், சிலரின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்று வெளியாகி வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில், நடிகைகள் ரம்யா பாண்டியன், சுனைனா, விஜே மணிமேகலை, அமிர்தா, அதுல்யா ரவி, கிரண் ரத்தோட் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த பெயர் பட்டியல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

ஆகஸ்ட்டில் தொடங்க வாய்ப்பு

வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதம் துவங்கும். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை காரணாமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது அதற்கு பின்னர் தான் துவங்கும் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here