கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள நிதி திரட்டும் விதமாக இந்தியாவும், பாகிஸ்தானும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற சோயப் அக்தரின் கோரிக்கைக்கு கிரிக்கெட் வீரர் கபில் தேவ் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

சோயப் அக்தர் கோரிக்கை

“கொரோனா பாதிப்பால் உருவாகியுள்ள இந்த கடினமான காலக்கட்டத்தில், நலநிதி திரட்டுவதற்காக இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என தான் விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கோரிக்கை விடுத்திருந்தார்.

கபில் தேவ் காட்டம்

இதற்கு பதிலளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், இந்தியா பணம் திரட்ட தேவையில்லை என்றும் தங்களுக்கு போதுமான நிதி உள்ளது என்றும் கூறியுள்ளார். தற்போதுள்ள நெருக்கடியைச் சமாளிக்க எங்கள் அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்படுவதாக குறிப்பிட்ட கபில்தேவ், இந்த காரணத்திற்காக பி.சி.சி.ஐ மிகப்பெரிய தொகையை (ரூ. 51 கோடி) நன்கொடையாக அளித்துள்ளது, மேலும் தேவை ஏற்பட்டால் அதிக நன்கொடை அளிக்கும் நிலையில் உள்ளது என்றும் கூறினார். இதற்கு நிதி திரட்ட தேவையில்லை எனவும் கபில்தேவ் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை ஏற்பாடு செய்வதென்பது எங்கள் கிரிக்கெட் வீரர்களை ஆபத்தில் ஆழ்த்துவது போன்றது. அது எங்களுக்குத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கபில்தேவ் பெருமை

மூன்று விளையாட்டுகளிலிருந்து நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பிய கபில் தேவ்,  அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களுக்கு நீங்கள் கிரிக்கெட்டைப் பற்றி யோசிக்க கூட முடியாது எனவும் கூறியுள்ளார். நாட்டை விட விளையாட்டு பெரியதாக இருக்க முடியாது. இந்த யுத்தத்தில் மருத்துவமனை ஊழியர்கள், காவல்துறை பிற அனைவரும் முன்னிலையில் நின்று நாட்டை காப்பதாகவும் கபில்தேவ் பெருமைபட கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here