‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சித்ரா தனது வருங்கால கணவருக்கு நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களை கவர்ந்த சித்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் செல்ல மருமகளாக இருப்பவர் சித்ரா. முல்லை என்ற பெயரில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர். ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான சித்ரா, பின்னர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன், சீரியல்களிலும் நடித்தார். ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2, வேலுநாச்சி போன்ற சீரியல்களால் மிகவும் பிரபலமான அவர், தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை ஆக நடித்து, அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு வருகிறார். எப்பொழுதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சித்ரா, அன்றாடம் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். புடவையில் எந்த அளவிற்கு மங்களகரமாக இருக்கின்றாரோ, அதேபோல் மாடர்ன் உடைகளிலும் கலக்குவார். இவர் கட்டியிருக்கும் சேலையை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் உள்ளனர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கூட்டு குடும்பத்தை மையமாக வைத்த கதை என்பதால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல் இளைஞர்களும் இந்த சீரியலுக்கு அடிமை என்றே சொல்லலாம்.

View this post on Instagram

@chithuvj @mullai_pandianstoresvjtv

A post shared by Chithuvj🌹 fan🌹 kandhasamy🌹 c.k (@chithuvj_fan_kandhasamy__c.k) on

சர்ப்ரைஸ் கிப்ட்

சித்ராவிடம் ரசிகர்கள் திருமணத்தைப் பற்றி பேசினால் அதை கேலியாகவும், கிண்டலாகவும் எடுத்து ஜாலியான பதில்களைச் சொல்லி தட்டிக்கழித்து விடுவார். இந்த நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி ஹேமந்த் என்ற தொழிலதிபருடன் சித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த புகைப்படங்கள் வெளியானதையடுத்து பலர் வாழ்த்துக்களை கூறினர். அதனைதொடர்ந்து, நிச்சயதார்த்த விழாவில் சித்ரா தன்னுடைய வருங்கால கணவருக்கு சர்ப்ரைஸாக கிப்ட் ஒன்றை கொடுக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஒரு பெட்டி நிறைய கேஸ் பலூன்களை நிறைத்து வைத்துள்ள சித்ரா, ஹேமந்த்தை அழைத்து, அந்தப் பெட்டியைத் திறக்க சொல்கிறார். அவர் அந்தப் பெட்டியை திறக்க, சிகப்பு நிற ஹார்ட்டின் பலூன்கள் பறந்து செல்கின்றன. இந்த வீடியோவை பார்த்த சித்ராவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்ததுடன், அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here