நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’ சீசன் 4 ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அந்நிகழ்ச்சிக்கான புதிய புரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிக் பாஸ்

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறது. பொதுவாக இந்த நிகழ்ச்சி ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டு அக்டோபர் மாதம் வரை 100 நாட்களுக்கு நடத்தப்படும். இதில் பங்கேற்பவர்களை தேர்வு செய்யும் பணி ஏப்ரல் மாதமே தொடங்கிவிடுகிறது. ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கின் காரணமாக எந்த ஒரு பணியும் சரிவர நடைபெறாமல் இருந்து வருகிறது.

விரைவில் ஷூட்டிங்

ஜூன், ஜூலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இம்முறை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4க்கான பணிகளை விஜய் டிவி நிர்வாகம் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கான புரொமோ வீடியோ கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4க்கான மற்றொரு புரொமோ வீடியோவை விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கமல்ஹாசன் நடித்துள்ள அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் குறித்தும், முகக்கசவம் அணிவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. “தப்புனா தட்டிக் கேட்பேன், நல்லதுனா தட்டிக் கொடுப்பேன்” என்ற கமல்ஹாசனின் வசனத்துடன் அந்த வீடியோ நிறைவு பெறுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான புதுப்புது அப்டேட்கள் தினந்தோறும் வெளிவந்த வண்ணம் உள்ளதால், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here