நடிகை சமந்தா திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அவருக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

ஹிட் படங்கள்

தமிழில் பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நான் ஈ படத்தின் மூலம் பல ரசிகர்களை உருவாக்கினார். தெலுங்கு மற்றும் தமிழில் அதிகம் கவனம் செலுத்தி வந்த நடிகை சமந்தா, கத்தி, தங்க மகன், தெறி, மெர்சல் என்று முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணிபுரிய தொடங்கினார். சூர்யா, விஜய், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என்று பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து ஹிட் படங்களை கொடுத்தார்.

முன்னணி நடிகை

சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் இவர் நடனமாடிய “ஓ சொல்றியா மாமா” பாடல் மூலம் சமந்தாவின் வேறு பரிமாணத்தை ரசிகர்கள் பார்த்தனர். தற்போது தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. விவாகரத்து, மையோசிட்டிஸ் என்ற அரியவகை நோய், சர்ச்சைகள் என பல இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி தற்போதும் முன்னிலை நடிகையாக முன்னேறி வருகின்றார் சமந்தா.

மனதார வாழ்த்து

இந்நிலையில் நடிகை சமந்தா திரையுலகத்தில் காலடியெடுத்து வைத்து 14 ஆண்டுகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டா பக்கத்தில் நயன்தாரா சமந்தாவிற்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதை தொடர்ந்து, பலரும் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here