தன்னைப் பற்றி சர்ச்சையாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு நடிகை திரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சர்ச்சை பேச்சு

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி. ராஜு, அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கூவத்தூர் விவகாரத்தில் அதிமுக குறித்தும், நடிகை திரிஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏ.வி. ராஜுவுக்கு திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

சட்ட நடவடிக்கை

நடிகை திரிஷாவும் தனது கண்டனத்தை பதிவு செய்ததுடன், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். இதையடுத்து தான் திரிஷா குறித்து பேசவில்லை எனவும், தன்னை தவறாக சித்தரித்து காட்டி உள்ளனர் என்றும் தமது பேச்சால் திரிஷாவின் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கோருவதாகவும்  ஏ.வி.ராஜு கூறினார்.

வக்கீல் நோட்டீஸ்

இந்த நிலையில், முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜூவுக்கு நடிகை திரிஷாவின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் திரிஷா குறித்து இணையத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் எழுத்து வடிவில் இருக்கும் அத்தனை அவதூறுகளையும் நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த நான்கு நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறும், திரிஷாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here