ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இப்படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்டோர் மிக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘அயலான்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் குவிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், ஆர்வமுடன் படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். இதற்கிடையில், நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் சேர்ந்து சென்னை வெற்றி திரையரங்கில் ‘அயலான்’ படத்தை பார்த்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அயலான்’ திரைப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், திரையரங்கில் அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கக்கூடிய படமாக இருக்கும் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here