சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 43 படத்தில் நடிகை அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

துறுதுறு நடிப்பு

தமிழ் சினிமாவில் ‘விருமன்’ படம் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். அவரின் எதார்த்தமான நடிப்பும், துறுதுறு குணமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துவிட்டது. இதனையடுத்து ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். டாக்டருக்கு படித்துள்ள நடிகை அதிதி ஷங்கர், சினிமாவில் இருந்த ஆசையால் நடிக்க வந்தார். தொடர்ந்துதனக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அதிதி.

மீண்டும் கூட்டணி

தற்போது சூரரைப் போற்று படத்திற்கு பிறகு மீண்டும் சுதா கொங்கரா, சூர்யா கூட்டணியில் உருவாகும் சூர்யாவின் 43வது படத்தில் நடிகை அதிதி ஷங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் ஏற்கனவே துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here