ரசிகர்களை கவரும் வகையில் பல சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி தற்போது புத்தம் புதிய மெகா தொடர் ஒன்றை ஒளிபரப்ப உள்ளது.

முன்னோடி தொலைக்காட்சி

பார்வையாளர்களுக்கு வசீகரிக்கும் தனித்துவமான நிகழ்ச்சிகளையும், சீரியல்களையும் அறிமுகப்படுத்துவதில் ஸ்டார் விஜய் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. ஸ்டார் விஜய் பல எண்ணற்ற நட்சத்திரங்களை தன் நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய்துவைத்ததின் மூலமாக அவர்களை திரைத்துறையிலும் நட்சத்திரங்களாக மின்னவைத்துள்ளது. அவர்கள் தற்போது திரைப்படத் துறையில் பிரபல நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து வருகின்றன. அவர்களில் சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றோரை குறிப்பிடலாம். சமீப காலங்களில் தீனா மற்றும் புகழ் என நகைச்சுவை நடிகர்கள் பலர் திரையுலகில் சிறந்த திறமைசாலிகளாக தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர்.

புதிய தொடர்

அந்த வரிசையில் விஜய் டிவி தற்போது சக்திவேல் ‘தீயாய் ஒரு தீராக்காதல்’ என்ற புத்தம் புதிய மெகா தொடரை அறிமுகப்படுத்துகிறது. டிசம்பர் 4 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சக்திவேல் – தீயாய் ஒரு தீராக்காதல் தொடரின் கதை ஒரு சுவாரஸ்யமான காதல் நிறைந்த விறுவிறுப்பான குடும்பக்கதையாகும்.

விறுவிறுப்பான கதை

சக்தி நன்கு படித்த ஒரு பேராசிரியை. பணம் மற்றும் அதிகாரம் கொண்ட குடும்பத்தில் பிறந்து சுற்றிக்கொண்டிருக்கும் முரட்டுக்குணம் கொண்ட வேலன் சக்தியை கண்மூடித்தனமாக காதலிக்கிறான். அவனது காதலை அறியாத சக்தி, அடிக்கடி பிரச்சனையில் சிக்கி, தான் அவனை காதலிக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக தன் குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். அவளது நிச்சயத்தன்று சக்தியின் மாப்பிள்ளையை வேலன் மிரட்டி திருமணத்திலிருந்து பின்வாங்கும்படி வற்புறுத்தும்போது, விஷயங்கள் பெரிய திருப்பத்தை எடுக்கின்றன. இதற்கு இணையாக, வேலனின் குடும்பத்தினர் வேலனை சக்தியிடமிருந்து பிரிக்க முயற்சிக்கின்றனர். சக்தி வேலனைத் தடுக்க முடியாது என்பதை உணர்ந்து, இந்தத் திருமணத்திற்காக அவனை வருந்தச் செய்ய அவனைத் திருமணம் செய்து கொள்கிறான். திருமணத்திற்குப் பிறகு இவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது மற்றும் ஆணாதிக்க வேலனின் குடும்பத்தில் சக்தியின் பயணம் என்ன என்பதை சுவாரஸ்யமாக இந்தக்கதை சொல்கிறது. டிசம்பர் 4 முதல் திங்கள் – சனி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சக்திவேல் புத்தம் புதிய மெகா தொடரை காணாதவறாதீர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here