நடிகை நயன்தாரா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் புதிய அவதாரம் எடுத்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னணி நடிகை

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சினிமாவில் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. ஐயா படத்தில் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நயன்தாரா, பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டிலும் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

குவியும் கமெண்ட்

இந்த நிலையில், நடிகை நயன்தாரா சமூக வலைதளத்தில் படப்பிடிப்பு தளத்தில் கேமராவுடன் படம் இயக்குவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, “புதிய தொடக்கத்தை நம்புங்கள்” என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் நயன்தாரா இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here