தயாரிப்பாளர் S.S.லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் தான் ‘லியோ’. இப்படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். ‘லியோ’ திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ‘லியோ’ படத்தின் முதல் 10 நிமிடங்களை தவற விட்டுவிடாதீர்கள்… எப்படியாவது படம் போடுவதற்கு முன்பு தியேட்டர் சென்றுவிடுங்கள். பார்வையாளர்களுக்கு ட்ரீட்டாக அமையும். அந்த 10 நிமிடத்திற்காக ஓராண்டாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உழைத்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here