இஸ்ரேல் போர் குறித்து சர்ச்சை கருத்துக்களை கூறிய ஆபாச பட நடிகை மியா கலிபாவுடன் செய்திருந்த ஒப்பந்தங்களை இரண்டு பிரபல நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன.

போர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தொடுத்த போர் உலக நாடுகளையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஹமாஸ் அமைப்பினருக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆபாச பட நடிகை மியா கலிபா தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துகளை தெரிவித்து உள்ளார்.

சர்ச்சை கருத்து

அதில், “பாலஸ்தீனியர்கள் இத்தனை காலம் அடைந்த துன்பத்தைப் பார்த்தும், நாம் அவர்களுக்கு துணையாக இல்லை என்றால் அதுதான் தவறு. பாலஸ்தீனத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களிடம், அவர்கள் படும் துயரத்தை ரெக்கார்ட் செய்யச் சொல்ல முடியுமா?” என்று மியா கலிபா குறிப்பிட்டிருந்தார். பாலஸ்தீன பயங்கரவாதிகளை சுதந்திரப் போராட்ட வீரர்கள் என மியா கலிபா குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒப்பந்தகள் ரத்து

நடிகை மியா கலிபாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. மியா கலிபாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவருடன் போட்டுள்ள தொழில் ரீதியான ஒப்பந்தங்களை கனடா நாட்டின் பிரபல வானொலி நிலையம் ரத்து செய்துள்ளது. அதேபோல் அமெரிக்காவின் பிரபல பிளேபாய் நிறுவனமும் அவருடனான அனைத்து ஒப்பந்தங்களையும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here