பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசனுக்கு அக்டோபர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பைக் வீலிங்

கோவையைச் சேர்ந்தவர் பிரபல யூ டியூபர் டிடிஎஃப் வாசன். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது சாகசம் செய்ய முயற்சித்தாக கூறப்படுகிறது. அப்போது அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் வாசனுக்கு கை எலும்பு முறிந்துள்ளது. அது தவிர உடலில் பல்வேறு இடங்களில் காயங்களும் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் உலா வந்தன.

சிறையில் அடைப்பு

பாலுசெட்டி சாத்திரம் காவல் துறையினர், டிடிஎஃப் வாசன் மீது, மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், யூ டியூபர் டிடிஎஃப் வாசனை அக்டோபர் 3 ஆம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைதொடர்ந்து, அக்டோபர் 3 ஆம் தேதி வரை புழல் சிறையில் டிடிஎஃப் வாசன் அடைக்கப்படுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here