தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள். இவர் தன்னுடைய நிறுவனம் தொடர்பான விளம்பரங்களில் தலைக்காட்ட ஆரம்பித்தார். அதில் அவர் வெளிப்படுத்தி இருந்த நடிப்பு பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. இருப்பினும் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாத சரவணன அருள், தொடர்ந்து முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து, விளம்பரப் படங்களில் நடித்தார். இதையடுத்து சினிமா பக்கம் சென்ற அவர் ‘லெஜண்ட்’ என்ற படத்தில் நடித்ததோடு, அந்தப் படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கவும் செய்தார். ‘தி லெஜண்ட்’ திரைப்படம் கடந்த மார்ச் 3 ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நம்பர் 1 இடத்தை பிடித்தது. இதனிடையே லெஜண்ட் சரவணன், தன்னுடைய அடுத்தப்படத்திற்கு தயாராகி வருவதாக கூறி புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில்  76வது சுதந்திர தினமான இன்று குழந்தைகளுடன் அதனைக்கொண்டாடிய சரவணன் அருள், அண்மையில் ஜெயிலர் திரைப்படத்தில் இடம் பெற்ற ஹூக்கும் பாடலுக்கு நடனமாடினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here