ஸ்டார் விஜய்யின் மற்றுமொரு வண்ணமயமான ரியாலிட்டி ஷோவான ‘கதா நாயகி’ என்னும் நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.

மின்னும் பிரபலங்கள்

பார்வையாளர்களுக்கு வசீகரிக்கும் தனித்துவமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் ஸ்டார் விஜய் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. ஸ்டார் விஜய், பல எண்ணற்ற நட்சத்திரங்களை தன் நிகழ்ச்சிகளில் அறிமுகம் செய்துவைத்ததின் மூலமாக அவர்களை திரைத்துறையிலும் நட்சத்திரங்களாக மின்னவைத்துள்ளது. அவர்கள் தற்போது திரைப்படத் துறையில் பிரபல நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து வருகின்றன. அவர்களில் சிவகார்த்திகேயன், சந்தானம் போன்றோரை குறிப்பிடலாம். சமீப காலங்களில் தீனா மற்றும் புகழ் என நகைச்சுவை நடிகர்கள் பலர் திரையுலகில் சிறந்த திறமைசாலிகளாக தங்களை நிலை நிறுத்திக்கொண்டனர்.

‘கதா நாயகி’

அந்த வரிசையில், தகுதியான பெண் கதாநாயகியை தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், ‘கதா நாயகி’ என்ற புதிய ரியாலிட்டி ஷோ ஜூலை 29 ஆம் தேதி அன்று சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகிறது. சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பான தேர்வு நடைபெற்றது. நடிப்புத் தொழிலில் அடியெடுத்து வைக்க விரும்பும் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள், மிகுந்த ஆர்வத்துடன் இத்தேர்வில் பங்கேற்றனர். அவர்களில் எட்டு முன்னணி போட்டியாளர்கள், இந்த “கதா நாயகி” நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த பங்கேற்பாளர்களின் ஒருமித்த நோக்கம் ஸ்டார் விஜய்யின் தொடர் ஒன்றில் பிரபலமான கதாநாயகியாக வேண்டும் என்பதுதான். தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளர்கள் வாழ்க்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் நடிப்புத் துறையில் ஒரு நட்சத்திரமாக ஆவதற்கு பொதுவான உத்வேகம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தவும், மதிப்பிடவும் ஒரு உறுதியான மற்றும் உற்சாகமான நடுவர்களாக நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இருக்கின்றனர்.

அரிய வாய்ப்பு

எனவே, இந்த தனித்துவமான கருத்து ஒவ்வொரு போட்டியாளரின் உண்மையான தன்மையையும், எபிசோட்களின் தொடரில் அவர்கள் நடிக்க கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை அவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தும். இந்த நிகழ்ச்சியில் பல திறமையான தமிழ் பேசும் ‘ஹீரோயின்கள்’ உள்ளனர். அவர்கள் விரைவில் தொலைக்காட்சி துறையில் நீண்ட தூரம் செல்ல உள்ளனர். இந்த நிகழ்ச்சியை ‘கலக்கப்போவது யாரு’ புகழ் குரேஷி மற்றும் பாலா தொகுத்து வழங்குகிறார்கள். ஜூலை 29 ஆம் தேதி அன்று ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவு 9.30 மணிக்கு ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகும் இந்த தனித்துவமான நிகழ்ச்சியயை காணத்தவராதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here