நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னணி நடிகை

1990-களில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், பிரபுதேவா உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள ரோஜா, இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு, சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். பின்னர் அரசியலில் தீவிரம் காட்டிய அவர், நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வானார். தற்போது ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அமைச்சரவையில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில் நடிகை ரோஜா திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கால் வலி மற்றும் கால் வீக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here