தனது பிறந்தநாளை முன்னிட்டு சீரியல் குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் நடிகை ஆலியா மானசா.

காதல் திருமணம்

சஞ்சீவ், ஆலியா மானசா இருவரும் ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்து, நிஜத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். விஜய் டிவியில் பிஸியாக இருந்து வந்த நடிகை ஆலியா மானசா, குழந்தை பிறப்புக்கு பிறகு சன் டிவிக்கு மாறிவிட்டார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடித்து வருகிறார் ஆலியா.

பிரியாணி ட்ரீட்

இரு குழந்தைகளுக்கு தாயான ஆலியா மானசா சீரியலில் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் ஆலியா மானசா ஹீரோயினாகவும், மற்றொரு தொடரான கயல் தொடரில் ஹீரோவாக சஞ்சீவும் தற்போது நடித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிறந்த நாளை கொண்டாடிய நடிகை ஆலியா தன்னுடைய கணவருடன் இணைந்து இனியா சீரியல் குழுவினருக்கு பார்ட்டி கொடுத்துள்ளார். பிறந்தநாள் பரிசாக பிரியாணி ஏற்பாடு செய்து அவர்கள் இருவரும் பரிமாறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here