தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லியோ முடிவு

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாகவும், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் விஜய் அடுத்த யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், விஜயும், வெங்கட் பிரபுவும் இணைப்போவதாக சமீபத்தில் அதிகாரபூர்வத் தகவல் வெளியானது. தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ள நிலையில், அதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அதன்பிறகு 20 வருடங்கள் கழித்து தற்போது விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி அமைந்துள்ளது.

நடிகைகள் தேர்வு

தளபதி 68 திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ஆன ஜூன் 22 ஆம் தேதி வெங்கட் பிரபு, விஜய் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப் போவதாக கூறியுள்ளனர். மேலும் இப்படத்திற்கான நடிகர், நடிகைகளின் தேர்வு நடந்து வருகின்றது. படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க ஏற்கனவே பல நடிகைகளின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தில் கீர்த்தி செட்டி ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

விஜய்க்கு ஜோடி

தற்போது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. பிரியா பவானி சங்கர் தொகுப்பாளினியாக தனது கெரியரை துவங்கியவர். தற்போது கமல்ஹாசன் உடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் அருள்நிதியுடன் இணைந்து டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இப்படி பிஸியான நடிகையாக இருக்கக்கூடிய பிரியா பவானி சங்கரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here