நடிகை குஷ்பு தனது வீட்டில் செம டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

பிஸியான குஷ்பு

சினிமாவில் நடிக்க துவங்கிய நாள் முதல் இன்று வரை அதே அழகு, பொலிவுடன் இருக்கும் நடிகை குஷ்புவை பார்த்து வியக்காதவர்கள் இருக்கவே முடியாது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பிரபலங்களும் ஆச்சரியப்படும் அளவிற்கு பிஸியாகவே இன்றும் இருந்து வருகிறார் நடிகை குஷ்பு. தனது உடல் எடையை கணிசமாக குறைத்து வேற லெவல் மாஸ் காட்டி வருகிறார். சமீபத்தில்கூட கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டுப்புடவையில் வந்து அசத்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அரசியல், சினிமா என இந்த வயதிலும் படு பிஸியாகவே இருந்து வருகிறார் குஷ்பு.

ஆட்டம் போட்ட குஷ்பு

இந்நிலையில் தனது வீட்டில் ரணதீரா படத்தின் பாடல் ஒன்றுக்கு நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் நடிகை குஷ்பு. 1988 ஆம் ஆண்டு கன்னடத்தில் குஷ்பு நடிப்பில் வெளியான ரணதீரா பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் வி.ரவிச்சந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் பரிசாகவே இப்படி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் கன்னட ரசிகர்களுக்கு நிறையவே கடன் பட்டிருப்பதாகவும் அவர்கள் கொடுத்த அன்பு மிகப்பெரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த குஷ்புவின் ரசிகர்கள் உற்சாகமடைந்து ஏகப்பட்ட கமெண்ட்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here