கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன பிரேசில் நாட்டைச் சேர்ந்த நடிகர் ஜெபர்சன் மச்சாடோ டா கோஸ்டா மரப்பெட்டிக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

காணாமல் போன நடிகர்

நடிகர் ஜெபர்சன் மச்சாடோ டா கோஸ்டா கடந்த ஜனவரி 27 ஆம் தேதி காணாமல் போனார். இவர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 44. இவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடையவியல் பரிசோதனையில் இறந்து போனது நடிகர் ஜெபர்சன் மச்சாடோ டா கோஸ்டா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திட்டமிட்ட கொலை

ஜெபர்சன் மச்சாடோ டா கோஸ்டாவின் கைகளிலும், கழுத்திலும் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரது உடலில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக ரசாயன திரவமும் போடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் இவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தீவிர பரிசோதனை அறிக்கை வந்த பிறகே காவல்துறையினர் இதனை உறுதி செய்வார்கள் என்று கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here