சந்திரமுகி 2 படப்பிடிப்பில் வடிவேலுவுடன் ஜாலியாக எடுத்த வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை ராதிகா சரத்குமார்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு

சந்திரமுகி படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் உள்ளார் பி வாசு. சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இணைந்தார். விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும், வீடியோக்களும் சமீபத்தில் வெளியாகி டிரெண்ட் ஆனது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் முடிந்தது.

ரஸ்க் சாப்பிடும் வடிவேலு

சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோக்களை நடிகை ராதிகா வெளியிடுவார். அந்த வகையில் தற்போது பட செட்டில் இருந்து வடிவேலு மற்றும் ராதிகா சரத்குமார் எடுத்துக்கொண்ட வீடியோவை ராதிகா பகிர்ந்துள்ளார். அதில், நடிகர் வடிவேலு ரஸ்க் ஒன்றை சாப்பிட்டுக் கொண்டு, மருதமலை படத்தில் இடம்பெற்ற பிரபலமான ரிஸ்க் எடுக்கிறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்கிற வசனத்தை பேசி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். இந்த வீடியோ தற்போது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here