பிரபல யூடியூபர் இர்ஃபான் கார் மோதி பெண் ஒருவர் பலியான விவகாரம் தொடர்பாக போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

யூடியூபர்

பிரபல யூடியூபரான இர்பான் ‘இர்பான் வியூஸ்’ எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர், திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

மூதாட்டி மரணம்

இதனிடையே, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இர்ஃபானின் சொகுசு கார், பொத்தேரி அருகே வந்த போது சாலையை கடக்க முயன்ற பத்மாவதி என்ற மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. சுமார் 20 அடிக்கு மேலாக தூக்கி வீசப்பட்ட அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வழக்குப்பதிவு

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போலீசார், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்ததுடன், அதனை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரை கைது செய்தனர். விபத்து ஏற்படுத்திய காரில் யூ டியூபர் இர்பான் பயணம் செய்து வந்ததாக கூறப்பட்டதையடுத்து, தற்போது இந்த சம்பவத்தின் போது இர்ஃபான் காரில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கூடுவாஞ்சேரி போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக 304 (ஏ) என்ற பிரிவின் கீழ் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் இர்பானின் மைத்துனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here