சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும், நடிகருமான லெஜண்ட் சரவணனின் புதிய போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

அசத்திய லெஜண்ட்

“தி லெஜண்ட்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணா, தனது முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆரம்பத்தில் இவர் ஹீரோவாக நடிப்பதை பலரும் ட்ரோல் செய்து வந்தனர். ஆனால் இப்படம் வசூல் சாதனை படைத்தது. அது மட்டுமில்லாமல் OTTயிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆரம்பத்தில் தன் கடை விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், தன் படத்தை சொந்தமாக தயாரித்து நடித்து அசத்தினார். இந்தப் படத்தின் வெற்றி காரணமாக அடுத்த கட்டமாக கதை கேட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் சரவணன்.

கலக்கல் புகைப்படங்கள்

இந்நிலையில், சமீபத்தில் கோட் சூட்டில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்நிலையில் மீண்டும் போட்டோஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார் சரவணன். கருப்பு மற்றும் ஆரஞ்சு காம்பினேஷனில் உள்ள கோட் சூட்டில் அசத்தியுள்ளார் லெஜண்ட் சரவணா. லெஜன்ட் படத்தில் இருந்த கெட்டப்பைவிட இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் கெட்டப் பார்ப்பதற்கு சூப்பராக இருப்பதால், இவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் இந்த கெட்டப்பில் நீங்கள் சூப்பராக இருக்கிறீர்கள் என்றும் அடுத்த படத்தில் இதே கெட்டப்பில் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here