எதிர்நீச்சல் நடித்து வரும் நடிகை கனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை செமையாக கலாய்த்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான தொடர்

சன் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் எதிர்நீச்சல் தொடருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தினம் தினம் பல திருப்பங்களும், சுவாரசியமான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் தொடராக இருக்கிறது. இந்தத் தொடரில் நடிகை கனிகா, நடிகர் மாரிமுத்து, மதுமிதா, ஹரிப்ரியா, கமலேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் இதுவரை 400 எபிசோடுகளை கடந்துள்ளது. 

வெள்ளித்திரை – சின்னத்திரை

‘ஃபைவ் ஸ்டார்’ திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை கனிகா, அதைத் தொடர்ந்து சேரன் இயக்கத்தில் ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்திலும், நடிகர் அஜித்துடன் இணைந்து ‘வரலாறு’ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என்று தென்னிந்திய சினிமாவில் ஹீரோயினாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். திரைத்துறை மட்டுமல்லாது சீரியலும் நடிகை கனிகா நடித்து வருகிறார். சன்டிவியின் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடிகை கனிகா ஈஸ்வரி எனும் கேரக்டரில் நடித்து வருகிறார். 

காமெடி கமெண்ட்

நடிகை கனிகா குடும்பத்தோடு மாலத்தீவிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு நீச்சல் உடையணிந்து எடுத்துக்கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், என்ன ஈஸ்வரி இதெல்லாம்? ஒருவேளை ஆதி குணசேகரன் மட்டும் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா? என்று ஜாலியாக கமெண்ட்களைப் பதிவிட்டு வருகின்றனர். சமீபகாலமாக அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் ரசிகர்கள் ஆதிகுணசேகரனுக்கு மட்டும் தெரிந்தால் என்னவாகும் தெரியுமா? என்று எதிர்நீச்சல் சீரியல் கதாப்பாத்திரத்தை ஒப்பிட்டு கமெண்ட்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here