பாலிவுட்டில் டாப் ஆக்ஷன் ஹீரோவாக இருந்து வரும் அர்னால்டு ஸ்வாஸ்நேக்கர் நெட் ஃபிளிக்ஸ் OTTயின் சீஃப் ஆக்சன் ஆபீஸராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆக்ஷன் ஹீரோ

ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னால்ட் ஸ்வாஸ்நேக்கருக்கு உலகளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 1970களில் நடிக்கத் துவங்கிய இவர், டெர்மினேட்டர் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமானார். இதை தொடர்ந்து வெளியான அடுத்தடுத்து பாகங்கள் இவரை உச்ச நடிகராக நிலை நிறுத்தியது. இதனை தொடர்ந்து டோட்டல் ரீகால், ட்ரு லைஸ், கமாண்டோ உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன்பிறகு ஹாலிவுட் படங்கள் என்றாலே அர்னால்ட் என்று சொல்லும் அளவுக்கு இவருக்கு பெயர் கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் டெர்மினேட்டர் படத்தில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

பொறுப்பேற்ற அர்னால்டு

இந்நிலையில் நெட் ஃபிளிக்ஸ் OTTயின் சீஃப் ஆக்சன் ஆபீஸராக அர்னால்டு நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஹாலிவுட் நடிகர், திரைப்பட இயக்குனர், தொழில் அதிபர், அமெரிக்க அரசியல்வாதி, கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் என பல முகங்களை கொண்ட அர்னால்டு, தற்போது புதிய முகமாக நெட்ஃப்ளிக்ஸ் OTTயின் சீஃப் ஆக்சன் ஆபீஸர் என்ற புதிய பொறுப்பை ஏற்றுள்ள செய்தி அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here