தளபதி 68 திரைப்படம் விஜய் பிறந்தநாள் அன்று துவங்கப் போவதாக கூறப்படுகிறது.

பிஸியான விஜய்

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் திரிஷா ஹீரோயினாகவும், அர்ஜூன், மன்சூர் அலி கான், சஞ்சய் தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். லியோ திரைப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் விஜய் அடுத்த யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், விஜயும், வெங்கட் பிரபுவும் இணைப்போவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. தளபதி 68 இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். அதன்பிறகு 20 வருடங்கள் கழித்து தற்போது விஜய்யும் யுவன் சங்கர் ராஜாவும் கூட்டணி அமைந்துள்ளது.

பிறந்தநாள் துவக்கம்

தளபத் 68 திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ஆன ஜூன் 22 ஆம் தேதி வெங்கட் பிரபு, விஜய் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப் போவதாக சொல்லப்படுகின்றது. அதற்கு முன்பாகவே லியோ படத்தின் சூட்டிங் முடிக்க வேண்டும் என்பதால், ஜூன் 15ஆம் தேதி லியோ படத்தின் சூட்டிங் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here