மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள விடாமுயற்சி படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிஸியான பைக் டூர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பைக் டூரில் படு பிஸியாக இருக்கும் அஜித் குமாரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறியுள்ளனர். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ஷூட்டிங் தேதி முடிவு

வாரிசு, துணிவு என இரு படங்களும் ஒன்றாக ரிலீசானது. ஆனால் அதன்பிறகு விஜய் லியோ படத்தையே முடிக்க உள்ளார். ஆனால் அஜித் இன்னும் அடுத்த படத்தின் வேலையை துவங்கவில்லையே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் துவங்க உள்ளதாக வெளியான அப்டேட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. அது மட்டும் இல்லாமல் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அஜித் ஸ்லிம் அண்ட் பிட்டாக இருக்கும் இதுதான் அஜித்தின் விடாமுயற்சியின் லுக் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here