கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி 60வது வயதில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

அசத்தல் நடிப்பு

1992 ஆம் ஆண்டு பாலிவுடில் சர்தார் என்ற படத்தின் மூலம் ஆஷிஷ் வித்யார்த்தி நடிகராக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் லேட்டாக ரிலீஸ் ஆனதால், த்ரோகால் திரைப்படம் முதலில் ரிலீஸ் ஆனது. இவரது முதல் படத்திலேயே சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். பிறகு இவருக்கு பல மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு குவிந்தது. அந்த வகையில் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என பல மொழிகளிலும் நடித்து அசத்தினார்.

பல படங்கள் ஹிட்

தமிழில் தில் படத்தின் மூலம் அறிமுகமானார் ஆஷிஷ் வித்யார்த்தி. தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்திற்குப் பிறகு தமிழில் அதிக வாய்ப்புக்கள் குவிய தொடங்கியது. 2002 ஆம் ஆண்டு பாபா படத்தில் நடித்திருந்த இவருக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்த பிறகு ஏழுமலை, தமிழ், பகவதி, தமிழன் என்று அந்த வருடம் மட்டுமே ஐந்து படங்களில் நடித்து வேற லெவல் ஹிட் கொடுத்தார். தரணி இயக்கத்தில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் ஆன கில்லி திரைப்படத்திலும் விஜய்க்கு அப்பாவாக நடித்து அசத்தினார். போலீஸ் அதிகாரியாக இவரது நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கடைசியாக இவர் தமிழில் என் வழி தனி வழி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இரண்டாவது திருமணம்

ஆஷிஷ் வித்யார்த்தி பழம்பெரும் நடிகையான சகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில வருடங்களுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் ஆஷிஷ். இந்நிலையில் தனது 60வது வயதில் அசாமைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கொல்கத்தாவில் நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவர்களது திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here