சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் இந்த வாரம் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.

பலத்த போட்டி

பல தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும், சன் டிவி சீரியல்களுகென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதனாலேயே சன் டிவியில் காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல், இனியா, சுந்தரி உள்ளிட்ட தொடர்களுக்குள் பலத்த போட்டி காணப்படுகின்றது. கடந்த சில வாரங்களாகவே கயல் தொடர் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து வருகின்றது.

முதல் 5 இடங்கள்

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக போராடும் கதைகளத்தை மையமாகக் கொண்டு கயல் தொடர் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் சன் டிவியில் துவங்கப்பட்ட இனியா தொடர் தற்பொழுது 150 எபிசோடுகளை நெருங்கி உள்ளது. நடிகை ஆலியா மானசாவிற்கு இந்த தொடரில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகின்றது. கயல் தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் 10.24 பெற்று முதலிடத்தில் உள்ளது. அதேபோல் இனியா தொடர் 9.16 டிஆர்பியுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை வானத்தைப் போல சீரியலும், நான்காவது இடத்தில் எதிர்நீச்சல் தொடரும், ஐந்தாவது இடத்தை சுந்தரி தொடரும் பிடித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here