தாடியுடன் இருக்கும் சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் SK21 படத்தின் லூக்கா இது? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சூப்பர் காம்போ

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் SK21 திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கின்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில், சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. சென்னையில் நடந்த பட பூஜையில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, ஜீவி பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் படத்தின் தயாரிப்பாளரான நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பூஜையில் பங்கேற்றார்.

அசுர வளர்ச்சி

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி, ஹீரோ ஹீரோயினாக படத்தில் ஒன்று சேர்ந்திருப்பது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் சிவகார்த்திகேயன் தாடியுடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அதனால் SK21 படத்தில் சிவகார்த்திகேயனின் லுக் இதுவாக இருக்கக்கூடும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் பழைய புகைப்படங்களை புதிய புகைப்படங்களுடன் ஒப்பிட்டு அசுர வளர்ச்சி என்று கூறி இவர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here