சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் டிஆர்பியில் டாப்பில் உள்ளதால் சீரியல் குழுவினர் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

சுவாரஸ்யமான தொடர்

சன் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் எதிர்நீச்சல் தொடருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தினம் தினம் பல திருப்பங்களும், சுவாரசியமான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் தொடராக இருக்கிறது.

உற்சாகத்தில் நடிகர்கள்

இந்தத் தொடரில் கனிகா, நடிகர் மாரிமுத்து, மதுமிதா, ஹரிப்ரியா, கமலேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் சமீபத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக சீரியல் குழுவினர் அறிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் 400வது எபிசோடை கடந்துள்ளது. இதனை சன் டிவி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் சீரியல் குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here