நடிகை மாளவிகா மோகனன் சிலம்பம் சுற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விக்ரம் தங்கலான்

பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை மாளவிகா மோகனன், சமீபத்தில் கிறிஸ்டி என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில், சீயான் விக்ரம், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தின் போஸ்டர்களும், விக்ரமின் வித்தியாசமான கெட்டப்பில் பல புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அது மட்டும் இல்லாமல் ஹிந்தியில் ருத்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

சிலம்பம் சுற்றும் மாளவிகா

தீவிரமான உடற்பயிற்சி, யோகா செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகை மாளவிகா மோகனன், அடிக்கடி தனது கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார். தற்போது அதை எல்லாம் தாண்டி “தங்கலான்” படத்திற்காக சிலம்பம் கற்றுள்ள மாளவிகா மோகனன் சிலம்பம் சுற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார். மொட்டை மாடியில் ட்ராக்ஸ் அணிந்து சிலம்பம் சுற்றும் மாளவிகாவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் “எனக்கும் சிலம்பம் சொல்லிக்கொடுங்க மாஸ்டர்” என்று கொஞ்சி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here