சின்னத்திரை நடிகை நட்சத்திரா விஸ்வநாதனின் வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

சீரியல் பிரபலம்

ஜீ தமிழில் யாரடி நீ மோகினி, வள்ளி திருமணம் ஆகிய தொடர்களில் நடித்ததவர் நட்சத்திரா விஸ்வநாதன். யாரடி நீ மோகினி தொடரில் நட்சத்திரா விஸ்வநாதன் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே இவரை மிகவும் பிரபலப்படுத்தியது. சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய நட்சத்திராவுக்கு, கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது . விஷ்வா என்பவரை திருமணம் செய்துகொண்ட நட்சத்திரா சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை பதிவிட்டு இருந்தார். இதனைதொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

வளைகாப்பு நிகழ்ச்சி

அடிக்கடி தன் கணவருடன் எடுக்கும் புகைப்படங்களையும், ரீல்ஸ் வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருவார் நட்சத்திரா. இந்நிலையில் நேற்று அவருக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. இதில் சீரியல் நடிகர்களும், சினிமா பிரபலங்களும் பங்கேற்று நட்சத்திரா – விஷ்வா ஜோடியை வாழ்த்தினர். நிகழ்ச்சியில் நடிகர் ரோபோ சங்கர் குடும்பத்துடன் பங்கேற்றார். அதுமட்டும் இல்லாமல் நடிகை தேவயானி, சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி உள்ளிட்ட பலரும் பங்கேற்று தம்பதிகளை வாழ்த்தினர். இந்த வளைகாப்பு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை நட்சத்திரா. இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here