சமந்தா நடிப்பில் வெளியான ஷாகுந்தலம் திரைப்படம் முன்னறிவிப்பின்றி அமேசானில் வெளியானதால் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

தோல்வி படம்

நடிகை சமந்தாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு மையோசிட்டிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் தேறிய சமந்தா படங்களிலும், வெப் தொடர்களிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சமந்தா நடித்த ஷாகுந்தலம் திரைப்படம் திரைக்கு வந்து படுதோல்வி அடைந்தது. வரலாற்று படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என்று ஆர்வமாக இருந்த சமந்தாவிற்கு, இந்த படத்தின் தோல்வி அதிர்ச்சியாகவே அமைந்தது.

அவமானப்படுத்தும் செயல்

ஷாகுந்தலம் படத்தின் தோல்வியால் தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட ரூ.20 கோடிக்கும் அதிகமாக நஷ்டமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் OTTயில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென ரிலீஸ் ஆனது. இதனை பார்த்த சமந்தா ரசிகர்கள் செம ஷாக்கில் உள்ளனர். எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி இப்படியா படத்தை ரிலீஸ் செய்வது? என்ன தான் படம் தோல்வி படமாக இருந்தாலும், சமந்தாவுக்கென்று தனி ரசிகர்கள் உள்ளனர். இப்படி முன்னறிவிப்பு இன்றி படத்தை ரிலீஸ் செய்வது சமந்தாவையும், அவரது ரசிகர்களையும் அவமானப்படுத்தும் செயல் என்று சோசியல் மீடியாக்களில் சமந்தாவின் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

வெற்றி கட்டாயம்

படம் ரிலீஸ் ஆன பிறகு அந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து OTTயில் ரிலீஸ் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி இப்படி திடீரென ரிலீஸ் செய்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சமந்தா தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் சிட்டாடல் வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே இவருக்கு நடித்த படங்கள் அனைத்தும் தோல்வி படங்களாக அமைந்ததால் இந்த வெப் தொடராவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற வெறியில் சமந்தா நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here