நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஓவியம் கலந்த பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து அசத்தியுள்ளார்.

பார்ட்டி மோட்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் ஜெயம் ரவி. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் ஹிட் ஜெயம் ரவியை மட்டுமில்லாமல் அவரது மனைவி ஆர்த்தியையும் குஷி படுத்தியுள்ளது. அதனால் டோட்டலாக பார்ட்டி மோடுக்கு சென்றுள்ளார் ஆர்த்தி ரவி. சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஆர்த்தி, பிரம்மாண்ட பார்ட்டி ஏற்பாடு செய்து சினிமா பிரபலங்களை அழைத்து விருந்து கொடுத்து வேற லெவல் மாஸ் காட்டினார். அதனைதொடர்து தற்போது “சிப் அண்ட் பெயிண்ட்” பார்ட்டி ஒன்று ஏற்பாடு செய்து நெருங்கிய நண்பர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார். இது சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் ஆர்த்தி.

கவர்ச்சி நாயகி

பிறந்தநாள் பார்ட்டி வைப் குறைவதற்கு முன் அடுத்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து தற்போது டிரெண்டிங் லிஸ்டில் இருக்கிறார் ஆர்த்தி. அடிக்கடி போட்டோஷூட் நடத்தி வரும் இவர், தற்போது பூ போட்ட கவுனை அணிந்து கொண்டு இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக மாறிவிட்டார். ஆர்த்தியின் அழகை பார்த்த ரசிகர்கள் விரைவில் நீங்களும் ஹீரோயினாக மாற்றிவிடுங்கள் என்று அன்பு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here